search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎஸ் அதிகாரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோவை பார்த்த பயனர்கள், தீயணைப்பு வாகனங்களும் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்கிறதா? என கேள்வி எழுப்பினர்.
    • 1993-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தியாகி, மகாராஷ்டிராவில் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டேராடூன்:

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டுக்கு வெளியே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு, வீட்டின் மாடியில் உள்ள நீர் தொட்டிகளை நிரப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    வைரலான வீடியோ ஜூன் 15-ல் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. வீடியோவில், மகாராஷ்டிரா மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா தியாகியின் வீட்டிற்கு வெளியே தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு புகை அல்லது நெருப்பு எதுவும் இல்லாமல் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள், தீயணைப்பு வாகனங்களும் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்கிறதா? என்றும் தண்ணீர் தொட்டிகளை நிரப்ப தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தினால், தீ விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்றும் கேள்வி எழுப்பினர்.


    இதையடுத்து இச்சம்பவம் குறித்து டேராடூன் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், வயதானவர்கள் இரண்டு பேர் வசிக்கும் வீட்டின் சமையலறையில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

    உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், சிலிண்டரில் தண்ணீரை ஊற்றி கசிவைக் குறைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் சிங்கும் தீயணைப்பு அதிகாரியிடம் தகவல் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1993-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தியாகி, மகாராஷ்டிராவில் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். கண்டிப்பான அதிகாரி என்று பெயர் பெற்றவர். 2014-ம் ஆண்டு ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான 'மர்தானி' திரைப்படம் இவரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
    • சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேவர், நாடார், கோனார், தேவேந்திரர் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. அதனால் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்.

    * ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

    * சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.

    • ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஐபிஎஸ் அதிகாரியாகும் கனவை வாரணாசி போலீசார் நிறைவேற்றி உள்ளனர்.

    9 வயது சிறுவன் ரன்வீர் பார்தி மூளைக்கட்டிக்கு மகாமனா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இத்தகைய சூழ்நிலையில், ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    சிறுவனின் விருப்பம் வாரணாசி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவன் ரன்வீர் பார்தி விருப்பத்தை வாரணாசி போலீசார் நிறைவேற்றினர். 

    போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான். அவனுக்கு மற்ற அதிகாரிகள் கைகுலுக்கி சல்யூட் அடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
    • உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அங்கு உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங் உட்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நெல்லை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுவரை 3 கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் அவற்றில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார். தொடர்ந்து 4-வது முறையாக இந்த வழக்கு இன்று நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நேரில் ஆஜரானார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

    அப்போது எதிர்தரப்பு வக்கீல் மகாராஜன் தாங்கள் இந்த வழக்கிற்காக ஆஜராக வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பல்வீர் சிங் தரப்பு வக்கீல் துரைராஜ், இந்த வழக்கை அரசு வக்கீல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படி அவருக்கு உதவி புரிவதற்காக வக்கீல்கள் நியமிக்கப்பட்டால் அதற்கான உத்தரவு நகலை தங்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

    • ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    மேலும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
    • பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்து விட்டார்.

    கொடநாடு வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கனகராஜ் விபத்தில் இறந்தது குறித்து போலீசாருக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இதில் இந்த விபத்தை நேரில் பார்த்தது சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.

    இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் விபத்தை கவனித்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    அதன்படி இன்று அவர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.

    அவரிடம் நீங்கள் விபத்தை எப்போது பார்த்தீர்கள். அந்த நேரம் நினைவிருக்கிறதா? அப்போது வேறு யாராவது அங்கு இருந்தனரா? விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியுமா? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    • ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
    • மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    கோவை:

    திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இங்கு முதலீடு செய்தனர்.

    ஆனால் இந்த நிறுவனம் இங்கு முதலீடு செய்த 58 ஆயிரத்து 571 பேரிடம் ரூ.930 கோடி மோசடி செய்தது. இதுதொடர்பாக இந்த நிறுவன இயக்குனர்களான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவை டான்பிட் கோர்ட்டு அவர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

    இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக அப்போது விசாரித்த போலீசார், கமலவள்ளியை கடத்திச்சென்று ரூ.3 கோடியை பறித்ததாக அவர் போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மோ கன்ராஜ் மற்றும் சண்முகையா, ஜான்பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தற்போது கரூர் காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான பிரமோத்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்ததுடன், கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அதுபோன்று மற்ற 4 பேரும் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமார், கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற 28-ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் பிரமோத்குமார் உட்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அபரஜிதா சிங் சின்வார். இவர் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டிணம் இணை கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திர குமார். அபராஜிதா சிங் சின்வாரும், தேவேந்திர குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திரகுமார் நேற்று மச்சிலபட்டினம் வந்தார்.

    இவர்களது திருமணம் மச்சிலிப்பட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    மாவட்ட பதிவாளர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் குட்லவல்லேறு மண்டலம், வேமாவரத்தில் உள்ள கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

    • போலீஸ் அதிகாரி ரவிதேஜாவின் காரை அலங்கரித்து அதில் அவரை அமர வைத்து இழுத்து சென்றனர்.
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வெளியே கூடை கூடையாக பூக்களை கொண்டு வந்து தயாராக நின்றிருந்த பொதுமக்கள் ரவி தேஜாவின் மீது பூ மழை பொழிந்தனர்.

    ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்தவர் ரவிதேஜா. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குஜராத் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு ஜூனாகட் மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ரவிதேஜா அப்பகுதியில் சிறப்பாக பணியாற்றி ரவுடிகளை ஒழித்து கட்டியுள்ளார். அவரது அதிரடி நடவடிக்கையால் குற்றச்செயல்கள் குறைந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து ரவி தேஜா தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ரவி தேஜா காந்திநகர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். தங்கள் பகுதியில் இருந்து நேர்மையான அதிகாரி ஒருவர் இடம் மாறுதலாகி செல்வது வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரை மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்க பொதுமக்கள் எண்ணினர். இதன்படி வழிநெடுக திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    போலீஸ் அதிகாரி ரவிதேஜாவின் காரை அலங்கரித்து அதில் அவரை அமர வைத்து இழுத்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வெளியே கூடை கூடையாக பூக்களை கொண்டு வந்து தயாராக நின்றிருந்த பொதுமக்கள் ரவி தேஜாவின் மீது பூ மழை பொழிந்தனர். சாலையோரமாக நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நேரில் வந்து அதிகாரி ரவி தேஜாவை மலர் தூவி வழியனுப்பி வைத்தனர். இதனை புன்முறுவலோடு மகிழ்ச்சி பொங்க ஏற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி ரவி தேஜா கைகூப்பி பொது மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து இப்படி மக்களின் மனங்களை வென்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது என்று பொது மக்களும், இளைஞர்களும் அவரை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • வக்கீலான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார்.
    • ஹர்ஜோத் சிங் பெயின்சுக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஜோதி யாதவுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். வக்கீலான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். 32 வயதான ஹர்ஜோத் சிங் பெயின்சுக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஜோதி யாதவுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் நேற்று திருமணம் நடந்தது. அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஜோதி யாதவ் தற்போது பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ்.
    • மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்

    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். அங்குள்ள கம்பீர்பூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெயின்ஸ் வக்கீல் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி ஆனார். ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். இவருக்கு தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். இவர் அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இம்மாத இறுதியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • உயர் பதவியில் இருந்த 2 பெண் அதிகாரிகள் பகிரங்கமாக மோதிக்கொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி, அவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ரூபா, அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

    ரோகிணி சிந்தூரி தனது தனிப்பட்ட ஆபாச புகைப்படங்களை 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பினார் என்றும், அதன் உள்நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

    அதுமட்டுமின்றி பல்வேறு முறைகேடு புகார்களையும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த ரோகிணி சிந்தூரி, ரூபா மனநலம் பாதித்தவர் போல் பேசுவதாக விமர்சித்தார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தார். உயர் பதவியில் இருந்த 2 பெண் அதிகாரிகள் பகிரங்கமாக மோதிக்கொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, 2 பேரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், அவர்கள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதன்பிறகும் மோதல் தொடர்ந்ததையடுத்து, தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடவும், அவதூறாக பேசுவதற்கும் தடை விதிக்க கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக ரோகிணி சிந்தூரி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி வரை ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ரூபா உள்பட 60 பேரை எதிர் மனுதாரராக சேர்த்திருப்பதுடன், தடை உத்தரவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க வருகிற 7-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ரூபாவுக்கு நோட்டீஸ் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ரூபா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. நீங்கள் எனக்கு அளித்த ஆதரவால் நான் பலமிக்கவளாக உணர்கிறேன். என்னுடைய மெசேஜ் பாக்ஸ் உங்களது குறுந்தகவல்களால் வெள்ளமென நிரம்பி இருக்கிறது.

    உங்களது ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி. நான் கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன். கோர்ட்டில் என்னுடைய வாதங்களை சமர்ப்பிப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

    ×